07/12/2025





டிட்வா (Ditwah) புயல் இலங்கை முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. 2025, டிசம்பர் 6 ஆம் திகதிய நிலவரத்தின் பிரகாரம், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600 இனைக் கடந்துள்ளதுடன் பல நூற்றுக்கணக்கானோர்; காணாமல் போயுள்ளனர்;. ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதுடன், உடமைகள், உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கும் பாரிய சேதங்கள்; ஏற்பட்டுள்ளன.
இலங்கை போன்ற வெப்பமண்டல நாடுகளின் மீதான காலநிலை மாற்றத்தின் தாக்கத்தின் நிலைமைகளின் மீதே டிட்வா உருவாக்கம் பெறுவதுடன் 2022 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 35 பில்லியன் அமெரிக்க டொலர் என்னும் தொகையிலான அரச கடன் தவணை தவறுகையினால் குறிக்கப்படும் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தன்மையையும் மேலும் சிக்கலுக்குள்ளாக்குகின்றது. பெரும்பாலான மக்கள் பிற்போக்கான வரி உயர்வு, மானியக் குறைப்பு, மற்றும் போதிய சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமை உள்ளடங்கலான கடுமையான சிக்கன நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, இலங்கை அரசாங்கம் (GoSL) தற்போது இடம்பெறும் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் கட்டுப்பாட்டிலும் சிக்கியுள்ளது. அரசாங்கத்தின் செலவினங்களை சர்வதேச நாணய நிதியம் கட்டுப்படுத்துவதால், தற்போது நிலவும் மனிதாபிமான நெருக்கடிக்குப் பதிற்செயற்பாடாற்றும் அரசாங்கத்தின் இயல்திறன் மட்டுப்படுத்தப்படுவது மாத்திரமன்றி, உட்கட்டமைப்பில் முதலீடு செய்தல், வாழ்வாதாரங்களை மீட்டெடுத்தல், மற்றும் காலநிலை மாற்றத்தினால் மேலும் ஏற்படக்கூடிய தாக்கங்களுக்கு தகவமைத்துக் கொள்ளல் ஆகியவற்றிற்கும் தீவிரமான தடையேற்படுத்தப்படுகின்றது.
முறைமைசார் காலநிலை அநீதியை டிட்வா கோடிட்டுக் காட்டுகின்றது. உலகளாவிய புதைபடிவ கார்பன் உமிழ்விற்கு 0.08மூ இற்கும் குறைவாகவே இலங்கை பங்களிக்கின்றபோதும், வெள்ளம், வரட்சி, மற்றும் நிலச்சரிவு போன்ற தீவிரமான காலநிலைத் தாக்கங்களினால் அது பாதிக்கப்படுகின்றது. நிலைபேறற்ற அபிவிருத்திக் கருத்திட்டங்கள், மற்றும் கைத்தொழில்சார் ஓரினப் பயிர்ச்செய்கைகள் (mono-cultural cultivations) ஆகியவை காடழிப்பு, மண் தரமிழப்பு, மற்றும் சூழற்தொகுதி முறைமையின் சீரழிவு ஆகியவற்றைத் தூண்டியுள்ளன. இவை உள்ளுர் சமுதாயங்கள் மற்றும் சுதேச சமூகங்களின் உரிமைகளுக்குப் பதிலாக பாரிய மூலதனம் மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு ஊக்குவிப்பு வழங்குவதுடன், இலங்கையின் விகிதசமமற்ற கடன் சுமைக்கும் காரணமாக அமைந்துள்ளன.
கடன் மூலம் நிதியளிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைகள், ஆழ்கடல் துறைமுகங்கள், வலுசக்திப் பூங்காக்கள் போன்ற மிகவும் பாரிய உட்கட்டமைப்புக் கருத்திட்டங்கள் காரணமாக சுற்றாடல் பாதுகாப்பு நடைமுறைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன, மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்; அவர்களின் வாழ்வாதாரங்கள் அழிந்துள்ளன, பாதிப்புறுநிலை அதிகரித்துள்ளது அத்துடன் மனித-யானை மோதல்கள் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, விசேடமாக சிறு விவசாயிகள், சிறு அளவிலான மீன்பிடியில் ஈடுபடுவோர், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் போன்ற ஓரங்கட்டப்படும் குழுக்கள் பொருளாதார மற்றும் சூழலியற்; பாதிப்புகளின் சுழற்சிகளில் சிக்கியுள்ளன.
இலங்கையின் மீட்சிக்காக கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தின் அவசர திருத்தம், பாரிய அளவிலான கடன் குறைப்பு, மற்றும் தற்போதைய மற்றும் எதிர்கால கடன் மீளச்;; செலுத்துதல்களை உடனடியாக நிறுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அதிக உமிழ்வினை மேற்கொள்ளும் நாடுகளிடமிருந்து பெறப்படும் இழப்பீடுகளுடன், கடனாக அல்லாது மானியமாக வழங்கப்படும் அதிகமான காலநிலை நிதிகளும் (climate finance) அவசியமாகும். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் கடன்-காலநிலை பொறி ஒன்றினை நிலைநிறுத்துகின்றன. 6.3 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் இந்நிலையில் இது மீண்டெழுந்தன்மையைக் கட்டியெழுப்புவதற்குத் தடையாக அமைவதுடன், சமூகப் பாதுகாப்பினையும் பாதிக்கின்றது. டிட்வா புயல் இலங்கை முழுவதும் விவசாய உற்பத்தியைக் கடுமையாக சீர்குலைத்துள்ளது. பரந்த அளவிலான பயிரிடப்பட்ட நிலங்களில் நீர் தேங்கியுள்ளதுடன் பிரதான உணவுப் பயிர்களும் சேதமடைந்துள்ளன. சிறு அளவிலான உற்பத்தியாளர்களுக்கு அவசர உதவி வழங்கப்படாவிட்டால், வரவிருக்கும் மாதங்களில் பாரிய அளவிலான ஓர் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதற்கான அபாயங்களை இந்நிலை உருவாக்கியுள்ளது. உணவு கிடைக்கப்பெறுவதை உறுதி செய்தல் என்பது அவசியமான உணவு இறக்குமதிகளின் ஊடாக சந்தைகளை நிரப்புவதை மாத்திரமன்றி, காலநிலை அனர்த்தங்களின் மீண்டுவரும் இயல்பின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்படுவோரான சிறு விவசாயிகள், பெண்கள், சிறியளவில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் போன்ற சிறு உணவு உற்பத்தியாளர்களில் முதலீடு செய்வதையும் ஈடுபடுத்துகின்றது.
அங்கீகரிக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கான தேவைகளை மதிப்பிடுதல், முன்னுரிமைகளை நிர்ணயித்தல், வளங்களை ஒதுக்குதல் மற்றும் நிதிகளை வழங்குதல் ஆகியவற்றிற்காக ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான குழு (Rebuilding Sri Lanka Committee), சுற்றாடலை அழிக்கும் வலுசக்திக் கருத்திட்டங்கள், தொழிலாளர் சுரண்டல் மற்றும் நுண்நிதிக் கடன் பொறிகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள கூட்டாண்மை நிறுவனங்களின் தலைவர்களைக் கொண்டுள்ளது. சமூக ஒப்புரவு மற்றும் சூழலியல்சார் நிலைபெறுதன்மைக்கு மேலாகப் பங்குதாரர் பெறுமதிக்கு முன்னுரிமை வழங்கும் வரலாற்றைக் கொண்ட இந்நிறுவனத் தலைவர்கள், சிவில் சமூகத்தின் அல்லது சமுதாயங்களின் பிரதிநிதித்துவம் இன்றி, மக்கள்-மைய மீளமைத்தலைக் காட்டிலும் இலாப நோக்கமுள்ள விளைவுகளை நோக்கியே மீட்சி நடவடிக்கைகளை வழிநடத்தும் அபாயம் காணப்படுகின்றது.
ஊழுீ, பிளாஸ்டிக் ஒப்பந்தம், மற்றும் உயிர்ப்பல்வகைமை ஊழுீ பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும்; உலகளாவிய பாடங்கள், சுதேச மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமுதாயத்தினரின் குரல்கள்; மக்களுக்கான மற்றும் பூமிக்கான நீதியைக் கோரும் அதேவேளை, தீர்மானம் மேற்கொள்ளும் மேடைகளில் ஆதிக்கம் செலுத்தும் வணிகம்சார் நலன்கள் தொடர்ச்சியாக இத்தகைய முன்னுரிமைகளைத் தடுக்கின்றன என்பதை வெளிப்படுத்துகின்றன. அனர்த்தங்கள் மீதான கூட்டாண்மை மூலதனமயமாக்கலுக்கு இது வழிவகுக்கின்றது.
கடன் நீதி மற்றும் காலநிலை நீதி ஆகியவற்றிற்கான கோரிக்கைகள்
சமூக இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஆதரித்து வாதிடும் குழுக்கள் உள்ளடங்கலான இலங்கையின் சிவில் சமூகக் கூட்டமைப்புகள், இழப்பீடுகளை வழங்குவதற்காக டிட்வா புயலின் தாக்கங்களை அளவிடுவதற்கு (பாதிக்கப்பட்ட சமுதாயங்;கள் மற்றும் அத்தகைய பிரதேசங்களுக்குப் பொறுப்புக் கூறும் சிவில் சமூகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட) சுயாதீன, மற்றும் பல பங்கீடுபாட்டாளர்களை கொண்ட இழப்பு மற்றும் சேத மதிப்பீட்டைக் கோருகின்றன. பொருளாதார இழப்புகளில் வீடமைப்பு, விவசாயம், ஏனைய வாழ்வாதாரங்கள் மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவை மாற்றுச் செலவுகள் மூலம் உள்ளடக்கப்படுகின்றன. மரணங்கள்ஃகாயங்களால் ஏற்படும் இயலாமையினால் மாற்றியமைக்கப்படும் வாழும் காலம் (னுயுடுலுள), ராம்சார் ஈரநிலங்களில் உயிர்ப்பல்வகைமையில் ஏற்படும் சேதம், மற்றும் ஓரங்கட்டப்படும் சமுதாயங்களின் கலாசாரஃபண்பாட்டுச் சிதைவு ஆகியவை பொருளாதாரம் சாரா இழப்புகளில் உள்ளடங்குகின்றன. சூழற்தொகுதிமுறைமைசார் சேவைகள், மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறை அளவுகோல்கள் மற்றும் சகாக்களினால் மதிப்பாய்வு செய்யப்பட்ட தராதரங்கள் ஆகியவற்றை மதிப்பீடு பயன்படுத்துவதுடன், மொத்த மதிப்புகளைக் கடன் இரத்து சமநிலைகளுடன் தொடர்புபடுத்துகின்றது.
2022 ஆம் ஆண்டில், 14.7 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உயர்வட்டி சர்வதேச இறைமை முறிகள் உள்ளடங்கலான 35 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடன் தவணை தவறுகையினால் தூண்டப்பட்ட கடன் நெருக்கடிக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சிவில் சமூகக் கூட்டமைப்புகள் மேலும் வலியுறுத்துகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 2025 ஆம் ஆண்டளவில் 2.3மூ என்னும் முதன்மை மிகையையும்;, 2027 ஆம் ஆண்டிலிருந்து மொத்த நிதித் தேவைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 13மூ இற்குக் குறைவாகக் காணப்படுவதையும் கோரும் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மானியங்களின் நீக்கம், தனியார்மயமாக்கல், மற்றும் அரச செலவினக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை விதித்துள்ளதுன. இந்நிலை நலிவடைந்த சமுதாயங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
கோரிக்கைகள்;
சிறு உணவு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரின் நலன்கள் மற்றும் சூழலியல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டமைத்தல்.
பாதிக்கப்பட்ட சமுதாயங்களின் தலைமையில், சுதேச சமூகத்தினர், சிறு உணவு உற்பத்தியாளர்கள், பெண்கள், மீனவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் அரசாங்க முகவராண்மைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் ஓர் உள்ளடங்கலான இழப்பு மற்றும் சேத மதிப்பீடு, பொருளாதார மற்றும் பொருளாதாரம் சாராத் தாக்கங்களை விரிவாக அளவிடுதல் வேண்டும்.
இழப்பு மற்றும் சேத (டுரூனு) மீட்சி அத்துடன் காலநிலைசார் மீண்டெழுந்தன்மை ஆகியவற்றிற்கு மேலாக அரசிறையின் ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை வழங்கும் வலுசக்தி மானிய நீக்கம், எரிபொருளுக்கான சந்தை விலை நிர்ணயம், மறைமுக வரி உயர்வு, மற்றும் சமூக நலன்புரி குறைப்புகள் (சமூகப் பாதுகாப்பானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6மூ); ஆகியவற்றை நிறுத்தல் வேண்டும்.
அளவிடப்பட்ட இழப்பு மற்றும் சேத (டுரூனு) மதிப்புகளுடன் (1–1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார மற்றும் பொருளாதாரம் சாரா விலைமதிப்பற்ற இழப்புகள்) சமநிலைப்படுத்தும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பில் நடைபெறும் மறுசீரமைப்பின் கீழ் தனியார் கடன் வழங்குநர்களிடமிருந்து பெறப்பட்ட உயர் வட்டியுடனான வர்த்தகக் கடன்களை நிராகரித்தல்.
இழப்பு மற்றும் சேதம் மற்றும் காலநிலை முதலீடுகளை அரசிறை இலக்குகளிலிருந்து விலக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (நுகுகு) நிபந்தனைகளை மறுசீரமைத்தல்; கடன் சேமிப்புகளை மீட்பு முன்னுரிமைகளுக்காக நிதியிடல் மேற்கொள்வதற்காக மாற்றுதல்; பொதுமக்களின் நலனை விட இலாபத்தை முன்னுரிமைப்படுத்தி, அரச நிறுவனங்கள் மற்றும் இயற்கை வளங்களை தனியார்மயமாக்குவதை ஊக்குவிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துதல்.
அனர்த்தங்களின்போதான பாதிப்புறுநிலையை சிக்கலுக்குள்ளாக்கும் நாணய மதிப்புக் குறைப்பு, வட்டி வீத உயர்வு (15.5மூ அளவுகோல்), மற்றும் பகிரங்க ஊதியம்ஃதொழில்வாய்ப்பு வரம்புகள் ஆகியவற்றை நிராகரித்தல்.
பாதுகாப்பு நடைமுறைகளை புறக்கணித்த கருத்திட்டங்களிலிருந்து உருவான இழிவுக் கடன்களை அடையாளம் கண்டு, டிட்வா புயலின் இழப்பு மற்றும் சேதக் கட்டமைப்புடன் ஒப்பிட்டு அளவிடும் வகையில் சர்வதேச நாணய நிதியம் – கடன் வழங்குநர் மறுசீரமைப்புகளுக்கான ஒரு பகிரங்கக் கணக்காய்வை மேற்கொள்ளல்.
இலங்கை மத்திய வங்கியின் மீது ஜனநாயகக் கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம், உள்நாட்டுப் பொருளாதாரத்தின் மீதான இறைமையை மீட்டெடுத்தல்.
புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் மீளக் கட்டியெழுப்புதல் நிகழ்ச்சித்திட்டங்களில், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பெண்கள் ஆணைக்குழு போன்ற பிரதான சுயாதீன அரசாங்க அமைப்புக்களின் கண்காணிப்புடன், வலுவான மக்கள் பங்கேற்பு மற்றும் கலந்தாலோசனை இடம்பெறுவதையும், மிகவும் பிரதானமாக, இத்திட்டங்களின் நிர்வகிப்பு பாரிய கூட்டுத்தாபனங்களிடம் ஒப்படைக்கப்படக்கூடாது என்பதையும் உறுதி செய்தல்;.
Organizations
- Adayaalam Centre for Policy Research
- All Ceylon Telecommunications Employees Union
- Ampara District Alliance for Land Rights (ADALR)
- Centre for Environmental Justice
- Christian Workers Fellowship (CWF)
- Climate Action Now Sri Lanka
- Collective for Historical Dialogue & Memory
- Dabindu Collective
- EQUAL GROUND, Sri Lanka
- Families of the Disappeared
- Federation of Media Employees Trade Unions
- FIAN Sri Lanka
- Gami Seva Sevana (GSS)
- Human Elevation Organization (HEO)
- Institute of Political Economy
- Law and Society Trust
- LOAM – Lanka Organic Agricultural Movement
- Mannar Women’s Development Federation
- Movement for Land and Agriculture Reforms (MONLAR)
- Movement for the Defence of Democratic Rights (MDDR)
- Movement of Christian Women’s Voice (MoCWV)
- Muslim Women Development Trust
- National Fisheries Solidarity Movement (NAFSO)
- NGO National Action Front
- People’s Alliance for Right to Land (PARL)
- Praja Abhilasha Network
- Revaluatory Existence for Human Development ( RED)
- Scaling Up Nutrition People’s Forum
- Shramabhimani Kendraya
- Social Scientists’ Association
- STANDUP Movement Lanka
- Strategic Inspirations (Pvt) Ltd
- Suriya Women’s Development Centre
- The Biodiversity Project
- Vikalpani National Women’s Federation
- Voice of Plantation People
- Women’s Action Network
- Young Women’s Christian Association (YWCA)
Individuals
- Anushaya Collure
- Anushka Kahandagamage, Postdoctoral fellow at Harvard Divinity School
- Ashila Dandeniya
- B.Gowthaman
- Balasingham Skanthakumar, Polity
- Brito Fernando, Human rights activist
- Buwanaka Perera
- Chandima Jayawardana
- Chintaka Rajapakse
- Chulani Kodikara, Independent Researcher
- Crystal Baines, Social Scientists’ Association
- D.A. Wasantha Pushpa Kumara
- Deekshya Illangasinghe
- Dr. Amali Wedagedara
- Dr. Mahendran Thiruvarangan, University of Jaffna
- Dr. Sepali Kottegoda
- Dr. Tanuja Thurairajah
- Duleeka Nonis
- Ermiza Tegal, Attorney at Law
- Gunawathie Hewagallage
- Hasini Lecamwasam, University of Peradeniya
- Indika Arulingam (PhD student, London School of Economics and Political Science)
- Jacintha Subasinghe
- Jenny Parameshwaran
- K. Nihal Ahamed
- Kasumi Ranasinghearchchige
- Kaushalya Navaratne
- krishna velupillai
- Lakshman Gunasekara, Journalist
- Lionel Bopage, Melbourne, Australia
- Madhulika Gunawardena
- Mansha Peiris
- Mareen Srinika, Human rights activist
- Melani Gunathilaka
- Melani Manel Perera – Journalist
- Nadheesha Hanwella
- Nagulan Nesiah
- Nigel Nugawela
- Nilmini Nonis
- Nimal I. Perera
- Nisha Perera
- Niyanthini Kadirgamar
- Pasan Jayasinghe
- Prof. Shamala Kumar
- Rev Andrew Devadason, Clergy, Anglican church, Diocese of Colombo
- Rohini Hensman, writer and independent scholar
- Rosanna Flamer-Caldera
- Rosita Fernando
- Roy Rodrigo
- Ruki Fernando
- S.Sivagurunathan
- Sahan Weerawardana
- Sakuna M Gamage
- Sandun Thudugala
- Sarah Arumugam
- Shirani Cooray
- Shivanthika Perera
- Shreen Saroor – Human rights activist
- Sister Berni De Silva
- Sister Chrishanthi Basil
- Sister Damitha De Silva
- Sister Deepa Fernando
- Sister Marian Evuesta
- Sister Shamindani Fernando
- Sister Shandika Perera
- Sister Sharmani Fernando
- Sister Shiromi Fernando
- Sister Sujeewa Gunatilake
- Sister Sumalki Fernando
- Sivamohan Sumathy
- Sujatha Perera
- Vasuki Jeyasankar, Batticaloa,
- Visakha Tillekeratne
- Wasantha Dissanayake
- Yasantha Chamara
Leave a comment