பத்திரிக்கை செய்தி
6 செப்டம்பர் 2024, கொழும்பில்,
நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கியமான ஜனாதிபதித் தேர்தலை இலங்கை நெருங்கி வரும் நிலையில், கடன் நீதி மற்றும் நாட்டின் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் குறித்து கவனம் செலுத்தும் யுக்தி, ஜனாதிபதி வேட்பாளர்களிடம் பத்து முக்கியமான கேள்விகளை முன்வைத்துள்ளது.ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுர குமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதான வேட்பாளர்களிடம், வேட்பாளர்களின் தேர்தலுக்குப் பின்னரான பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக யுக்தி இந்தக் கேள்விகளை எழுத்து மூலம் முன்வைத்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கான ஒரே சாத்தியமான தீர்வு சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை மட்டுமே என்று இலங்கைத் தலைவர்கள் வலியுறுத்திய ஒரு நேரத்தில், எந்தவொரு மாற்று கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வையும் (DSA) நிராகரிக்கிறது,ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தலுக்குப் பிந்தைய பொருளாதாரக் கொள்கைகள் குறித்து தங்கள் நிலைப்பாட்டை தெளிவாகக் கூற வேண்டும். தேர்தல்கள் குறித்து இலங்கை மக்களுக்கு அறிவிப்பதில் அவர்களின் பதில்கள் முக்கிய பங்கு வகிக்கும்.
ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கேட்கப்பட்ட 10 கேள்விகள் பின்வருமாறு.
1. சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஆகு) உடன்படிக்கை மீதான உங்களின் நிலைப்பாடு என்ன? நீங்கள் அதனைத் தொடர்வீர்களாஇ நிராகரிப்பீர்களாஇ அல்லது மீள்; பேச்சுவார்த்தையில் ஈடுபடுவீர்களா? நீங்கள் உடன்படிக்கை குறித்து மீள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவீர்களாயின்இ சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் பற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன? குறிப்பாக எந்த வாசகங்களை நீங்கள் மாற்றுவீர்கள்இ அத்துடன் அதற்கான குறிக்கோள்கள் யாவை? அதியுயர் அடிப்படை வரவுசெலவுத்திட்ட மிகை இலக்குகளை (அதிகரித்த வரி விதிப்பு மற்றும் குறைக்கப்படும் அரச செலவினம் ஆகியவற்றின் ஊடாக உயர்ந்த வருமானம்) உருவாக்குவதற்குத் தேவைப்படுவதாக நியாயப்படுத்தப்படும் மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு நீங்கள் எவ்வாhறு பதிற்செயற்பாடு மேற்கொள்வீர்கள்?
2. தற்போது இடம்பெற்று வரும் கடன் மறுசீரமைப்புச் செயன்முறை அத்துடன் ஏனைய பல விடயங்களுடன்இ எதிர்காலப் பாராளுமன்றங்களின் மீது சந்தேகத்துக்குரிய பொருளாதார எதிர்வுகூறல்களைப் பிணிப்பதற்கு முயற்சிக்கும் பொருளாதார நிலைமாற்றச் சட்டத்தின் பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றின் மீதான உங்களின் நிலைப்பாடு என்ன? நீங்கள் பொருளாதார நிலைமாற்றச் சட்டத்தை நீக்குவீர்களா? சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைபெறுதன்மைப் பகுப்பாய்வு (னுளுயு)இ வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக முதல் தொகை மற்றும் வட்டிக்கான மொத்த நிதியிடல் தேவைகளாக (புகுளே) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5மூ இனை எதிர்வுகூறுகின்றது. வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களிடமிருந்து மேலும் உயர்வான உச்சவரம்புகளுடன் மேலும் நம்பகரமான ஒரு கடன் நிலைபெறுதன்மைப் பகுப்பாய்வை நீங்கள் கோருவீர்களா?
3.பொருளாதார நெருக்கடியினால் மக்களின் வாழ்வாதாரங்களும் தொழில் வாய்ப்புக்களும் சீர்குலைக்கப்பட்டுள்;ளன. அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டம் உள்ளடங்கலான சமூகப் பாதுகாப்பு மீதான உங்களின் நிலைப்பாடு என்ன? உலகளாவிய சமூகப் பாதுகாப்பு தொடர்பில் நீங்கள் கொண்டுள்ள நிலைப்பாடு எவ்வாறு அமைந்துள்ளது? சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளவாறாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6மூ என்னும் மிகச் சொற்பமான தற்போதைய தொகையைக் கருத்திற்கொண்டுஇ சமூக செலவினங்களுக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எவ்வளவு விகிதத்தை நீங்கள் ஒதுக்கீடு செய்வீர்கள்? கடுமையான சிக்கன நடவடிக்கைகளில் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வித் துறைகளில் குறைக்கப்பட்ட பொதுச் செலவினங்கள் உள்ளடக்குகின்றன. உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எவ்வளவு விகிதத்தை நீங்கள் ஒதுக்கீடு செய்வீர்கள்?
4.கொவிட் – 19 பெருந்தொற்றின்போதும்இ அத்துடன் விசேடமாக 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியின் பின்னரும்இ சிறுவர்கள் போ~hக்கின்மையினால் பாதிக்கப்படுவதுடன் பல குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின்மையை அனுபவிக்கின்றன. கட்டுபடியாகும் மற்றும் போ~hக்கு மிக்க உணவிற்கான அணுகலைக் கொண்டிருப்பதற்கு மக்களுக்கு என்ன நிகழ்ச்சித்திட்டத்தை நீங்கள் அறிமுகம் செய்வீர்கள்? ஓர் உலகளாவிய உணவு மானிய நிகழ்ச்சித்திட்டம் மீதான உங்களின் நிலைப்பாடு என்ன?
5.கடன் தவணை தவறுகை இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர்இ 18மூ என்னும் உயர்ந்த சேர்பெறுமதி வரியின் ஊடாக உழைக்கும் மக்கள் பொருளாதார நெருக்கடியின் சுமையைத் தாங்குகின்றனர். உழைக்கும் மக்களின் மீதான நியாயமற்ற மறைமுக வரி விதிப்பு என்னும் சுமையைக் குறைப்பதற்கு சேர்பெறுமதி வரியை நீங்கள் குறைப்பீர்களா மற்றும்ஃஅல்லது நீக்குவீர்களா? அவ்வாறு செய்வீர்களாயின்இ எத்தகைய அளவினால் மற்றும்ஃஅல்லது எத்தகைய பொருட்களுக்கு? மற்றும்இ மீள் பங்கீட்டை நோக்கிய செர்த்து வரிகள் மீதான உங்களின் நிலைப்பாடு என்ன?
6.இலங்கை மின்சார சபை (ஊநுடீ)இ இலங்கை ரெலிகொம்இ மற்றும் அரச வங்கிகள் உள்ளடங்கலான அரச சேவைகளின் தனியார்மயமாக்கம் பற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன? மூலோபாய அரச சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் அத்தியாவசிய சேவைகள் குறைவான பெறுமதியில் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்கும் நீங்கள் நடைமுறைப்படுத்தக்கூடிய பதிலீட்டு மறுசீரமைப்புக்கள் யாவை?
7.வலுசக்தியின் சந்தை விலையிடலின் காரணமாக எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவை பிரசைகளுக்குக் கட்டுபடியாகாத நிலை ஏற்பட்டுள்ளதுடன்இ மீன்பிடியில் ஈடுபடுவோர் மற்றும் சிறியளவிலான உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரங்களிலும் இது தீவிரமான ஒரு தாக்கத்தைக் கொண்டுள்ளது. குறைந்தளவிலான வருமானம் பெறும் குழுக்களுக்கு வலுசக்தியை அணுகக்கூடியதாகவும் கட்டுபடியானதாகவும் ஆக்குதல் பற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன?
8.ஓய்வூதிய நிதிகளின் கணிசமான குறைப்பிற்கு உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வழி வகுத்துள்ளது. உழைக்கும் மக்களுக்கான இந்த அநீதியை நீங்கள் எவ்வாறு நிவர்த்தி செய்வீர்கள்?
9.பொருளாதார நெருக்கடியின் ஆரம்பத்திலிருந்து சிந்தித்துப் பார்க்க முடியாத அளவிற்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. நீங்கள் நிர்ணயிக்கவுள்ள ஆகக்குறைந்த மாதாந்த மற்றும் நாளாந்த ஊதியம் எவ்வளவுஇ மற்றும் அது எவ்வாறு கணக்கிடப்படும்? பெண்கள் எமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாவர்; குறிப்பாகத் தேயிலை பறிப்போர் மற்றும் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு நீங்கள் முன்மொழியும் ஊதியங்கள் யாவை?
10.நாட்டின் பல பாகங்களிலுள்ள உழைக்கும் மக்கள்இ குறிப்பாக மலையகத் தமிழர்கள் காணியற்றவர்களாக உள்ளனர். வீடமைப்பு மற்றும் கமத்தொழிலுக்காகக் காணிகளின் அணுகலை உறுதிப்படுத்துவதற்குக் காணி பாராதீனப்படுத்தல் மற்றும் மீள் பங்கீடு ஆகியவற்றிற்கான உங்களின் கொள்கைகள் யாவை?
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள், வேட்பாளர்களின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அவர்களின் முடிவுகளை எடுப்பதற்கு அவசியமான முன்னுரிமைகள் பற்றிய முக்கியமான நுண்ணறிவை வாக்காளர்களுக்கு வழங்கும் என்று யுக்தி வலியுறுத்துகிறது.
வாக்காளர் தெரிவுகளை வடிவமைப்பதில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஒரு முக்கியமான காரணியாக இருப்பதால், மக்களின் தேவைகள் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் தெளிவான மற்றும் விரிவான திட்டங்களை முன்வைக்க அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் நீதி அழைப்பு விடுத்துள்ளது.
பொருளாதார நிச்சயமற்ற காலங்களில், வேட்பாளர்கள் கடன் மறுசீரமைப்பு, மாற்றுக் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு (DSA), வாழ்க்கைச் செலவு, சமூக நல அமைப்புகளுக்கான அரசாங்க செலவுகள் மற்றும் வேலைகள் மற்றும் வாழ்வாதாரங்களை உருவாக்கும் பொருளாதார வளர்ச்சி போன்ற அழுத்தமான சிக்கல்களைத் தீர்ப்பது மிகவும் முக்கியமானது “யுக்தி” நம்பிக்கை கொண்டவர்.உழைக்கும் மக்களின் சுமையை குறைக்கும் நடைமுறை தீர்வுகளை முன்மொழிவதற்கு “யுக்தி” வேட்பாளர்களை ஊக்குவிக்கிறது.
***********
Leave a comment