Home Press Release Statements தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையில் காணப்படும் ‘சட்டத்தின் தெரிவு’ என்னும் வாசகம் குறித்த அக்கறைகள்
Statements

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையில் காணப்படும் ‘சட்டத்தின் தெரிவு’ என்னும் வாசகம் குறித்த அக்கறைகள்

43

By YUKTHI

இலங்கை தற்போது அதன் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் தனது வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது. 2022 ஆம் ஆண்டில் நாடு அதன் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளை மேற்கொள்ளத் தவறியதுடன் ஆரம்பக் கடன் உடன்படிக்கைளின் கீழான கொடுப்பனவுகளையும் நிறுத்தியது. இலங்கை தனது கடன் வழங்குநர்களுக்கு எப்போது, எவ்வளவு மற்றும் எவ்வளவு காலத்திற்குக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் என்பது கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளில் தரப்பட்டிருக்கும். இந்த ஒப்பந்தங்களின் நியதிகள், வெளிவாரிச் சந்தைக்கான அணுகல் மீட்டெடுக்கப்படும்போது, பெரும்பாலும் 2027 ஆம் ஆண்டின் பின்னர் பயனுக்கு வரும். கடன் மீள்கொடுப்பனவின் அளவானது வேறொரு நெருக்கடிக்கு, வேறொரு கடன் தவணை தவறுகைக்கு இட்டுச் செல்லக்கூடும் என்பதுடன் இலங்கையின் எதிர்காலச் சந்ததியினரையும் பாதிக்கும். மறுசீரமைக்கப்பட்ட பிணைமுறிகள் உள்ளடங்கலான இறைமை முறிகள் ஒப்பந்தச் சட்டத்;தை அடிப்படையாகக் கொண்டவை. ஏனெனில், எந்தவோர் உடன்படிக்கையும் அல்லது பல்தரப்புச் சட்டச் சட்டகமும் இவற்றை ஆளுகை செய்வதில்லை. ஆகவே, கொள்கை அடிப்படையில் பிணக்கு ஒன்று ஏற்படும் சந்தர்ப்பத்தில் எந்தச் சட்டம் பிரயோகிக்கப்படும் என்பது உள்ளடங்கலாக விசாரணை நியதிகளுக்கு உடன்படுவதற்கான சுதந்திரத்தைத் தரப்புகள் (கடன் வழங்குநர்கள் மற்றும் கடன் பெற்ற நாடுகள்) கொண்டுள்ளன.

2024 செப்டெம்பர் 19 ஆம் திகதி, பிணைமுறி உரிமையாளர்களின் தற்காலிகக் குழு, இலங்கையின் உள்நாட்டுக் கூட்டமைப்பு, மற்றும் சீன அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் கடன் மறுசீரமைப்பிற்கான நியதிகள் மீதான கோட்பாட்டு ரீதியான உடன்படிக்கை ஒன்றினை எட்டியுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. கோட்பாட்டு ரீதியான ஓர் உடன்படிக்கை என்பதன் பொருள் சட்டரீதியாகப் பிணிக்கின்ற அல்லது அமுலாக்கப்படக்கூடிய ஓர் ஒப்பந்தம் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை என்பதாகும்.

இந்த அறிவிப்பினை அடிப்படையாகக் கொண்டு, ‘பிணைமுறி உரிமையாளர்களின் தற்காலிகக் குழுவின் வழிப்படுத்தற் குழுவின் ‘வரையறுக்கப்பட்ட உறுப்பினர்களுடனான’ இந்தக் ‘கோட்பாட்டு அடிப்படையிலான உடன்படிக்கை’ இ சர்வதேச இறைமை முறிகளின் மொத்தக் கையிருப்பின் ஐம்பது வீதத்திற்கும் மேலானவை இச்சட்டத்தின் கீழ் எழுத்துறுதி செய்யப்பட்டதான, நியூயோர்க் சட்டத்தினால் பிணிக்கப்படாதிருப்பதற்கு, சம்பந்தப்பட்ட அனைத்துக் கடன் வழங்குநர்களுக்கிடையிலான கருத்தொருமிப்பிற்கான தேவையுமின்றித் தீர்மானிப்பதற்குக் கடன் வழங்குநர்களை அனுமதிக்கும் வாசகம் ஒன்றினை உள்ளடக்குகின்றது. . மேலும், கடன் வழங்குநர்களினால் மேற்கொள்ளப்படும் இத்தகைய ஒரு மாற்றத்தினை இரத்துச் செய்வதற்கான அதிகாரத்தை இலங்கை கொண்டிருக்கும் எனவும் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை

அக்கறைகள்

  1. இந்தச் ‘சட்டத்தின் தெரிவு’ என்னும் வாசகம், நியாயமான மற்றும் நிலைபேறான கடன் மறுசீரமைப்பினை வலியுறுத்தும் புதிய சட்டங்களைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாகும். நியூயோர்க்கில் முன்மொழியப்பட்டுள்ள இறைமைக் கடன் நிலைத்தன்மைச் சட்டமே கடன் வழங்குநர்கள் நியூயோர்க் சட்டத்தைத் தவிர்ப்பதற்காக முயற்சி செய்து வருவதற்கான காரணம் என வர்ணணையாளர்கள் ஊகங்களை முன்வைத்துள்ளனர். முன்மொழியப்பட்டுள்ள நியூயோர்க் சட்டம், மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தைகளில் கடன் பெற்றுள்ள நாடுகளின் பாதகமான நிலைமையை நிவர்த்தி செய்வதற்காக நியாயமான மறுசீரமைப்பினை விதித்துரைக்கின்றது. இந்தச் சட்டமூலம் எதிர்ப்பைச் சந்தித்து வருவதுடன் அது நிறைவேற்றப்படவும் வேண்டியுள்ளது.
  2. சர்வதேச ரீதியாக, இத்தகைய ஒரு பாதகமான வாசகத்தை வகுத்தமைப்பதன் மூலம் இலங்கை ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். ஏறத்தாழ எழுபது நாடுகள் கடன் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள காலப்பகுதியொன்றில் உறுதிப்பாட்டைக் கட்டியெழுப்புதலும் கடன் வழங்குநர்களின் அடக்குமுறையான மற்றும் பறித்தெடுக்கும் கடன் மறுசீரமைப்பினை எதிர்த்தலும் அத்தியாவசியமானவையாகும். தற்போதுவரை, சுரிநாம் (ளுரசiயெஅந) மாத்திரமே இதனை ஒத்த வாசகம் ஒன்றினை வகுத்தமைத்துள்ளது. ஆயினும், சட்டத்தின் தெரிவு என்னும் விருப்பத்தெரிவின் பயன்பாட்டை இரத்துச் செய்வதற்கான அதிகாரத்தை அவர்கள் தக்கவைத்துள்ளனர்.
  3. இலங்கையின் கடன் மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாகவே இரகசியமாக நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கு இலங்கை அரசாங்கம் அதன் கடன் வழங்குநர்களுடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகளின் செயன்முறை மற்றும் வரைவு உடன்படிக்கைகள் என்பவற்றுடன் அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் மற்றும் மற்றும் பேச்சுவார்த்தைச் சட்டகம் ஆகியவற்றின் மீதான பொதுமக்கள் தொடர்பாடல் மற்றும் வெளிப்படைத்தன்மை என்பன தேவைப்படுத்தப்படுகின்றன. சனநாயகச் செயன்முறை ஒன்றின் விளைவாக, எந்தவொரு இறுதி செய்யப்பட்ட உடன்படிக்கையிலும் நாடு கையொப்பமிடுவதற்கு முன்னர் அது பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

ஏர்மிசா டேகல் மற்றும் நம~;யா ரத்நாயக்க, சட்டத்தரணிகள் (5 ஒக்டோபர் 2024). தங்களது கருத்துக்களை வழங்கியமைக்காக கலாநிதி அகிலன் கதிர்காமர் மற்றும் யதுர்~h உலகேந்திரன் ஆகியோருக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மைப் பகுப்பாய்வு, 2027 ஆம் ஆண்டிலேயே வெளிவாரிச் சந்தைக்கான அணுகல் மீளப் பெறப்பட்டுள்ளது என்னும் ஊகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பார்க்க, சர்வதேச நாணய நிதியம், ‘சர்வதேச நாணய நிதியத்தின் நாட்டிற்கான அறிக்கை இல 23ஃ116’ (மார்ச் 2023), பக்கம் 55 hவவிள:ஃஃறறற.iஅக.ழசபஃநnஃPரடிடiஉயவழைளெஃஊசுஃஐளளரநளஃ2023ஃ03ஃ20ஃளுசi-டுயமெய-சுநஙரநளவ-கழச-யn-நுஒவநனெநன-யுசசயபெநஅநவெ-ருனெநச-வாந-நுஒவநனெநன-குரனெ-குயஉடைவைல-Pசநளள-531191 இல் கிடைக்கப்பெறும்.
பொதுவாகப் பார்க்க, பிலிப் வூட் ‘பிணைமுறிகளுக்கான ஆளுகைச் சட்டத்தின் தெரிவு’ (2020) 15 (1)இ ஊயிவையட ஆயசமநவள துழரசயெட 3
அறிவிப்பின் முழுமையான உரை வடிவம் hவவிள:ஃஃறறற.டழனெழளெவழஉமநஒஉhயபெந.உழஅஃநெறள-யசவiஉடநஃ70ணுடுஃயnழெரnஉநஅநவெ-ழக-யபசநநஅநவெ-in-pசinஉipடநஃ16674142 இல் கிடைக்கப்பெறும்.
பிணைமுறிகளைக் கொண்டுள்ளோரின் தற்காலிகக் குழுவின் வழிப்படுத்தற் குழுவின் ஒன்பது உறுப்பினர்களைக் குறிப்பீடு செய்கின்றது. அக்குழுவின் 10 மிகப் பெரும் உறுப்பினர்கள் அடங்கிய வழிப்படுத்தற் குழு, அண்ணளவாகப் பிணைமுறிகளின் மொத்த நிலுவைத் தொகையின் 40மூ இனை கட்டுப்படுத்துகின்றனது. தற்காலிகக் குழுவானது, நிலுவையில் உள்ள சர்வதேசப் பிணைமுறிகளின் 11 தொடர்களின் 30 இற்கும் மேற்பட்ட நிறுவனம்சார் உரிமையாளர்களைக் கொண்டுள்ளதுடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் சர்வதேச முதலீட்டாளர்களின் நலன்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்றது. தற்காலிகக் குழு பற்றிய மேலதிகத் தகவல்களைப் பெறுவதற்கு, றூவைந ரூ ஊயளந டுடுPஇ ‘இலங்கையின் பிணைமுறி உரிமையாளர்கள் குழு உருவாக்கத்தை அறிவித்துள்ளனர்’ (Pசுளுநேறளறசைநஇ 21 ஜூன் 2022) இனைப் பார்க்க.
hவவிள:ஃஃறறற.pசநெறளறசைந.உழஅஃநெறள-சநடநயளநளஃளசi-டயமெய-டிழனொழடனநசள-யnழெரnஉந-கழசஅயவழைn-ழக-பசழரி-301571937.hவஅட இல் கிடைக்கப்பெறும்.
சர்வதேச நாணய நிதியம், தனியார் துறைக் கடன் வழங்குநர்களை ஈடுபடுத்தும் இறைமைக் கடன்களைத் தீர்ப்பதற்கான சர்வதேசக் கட்டமைவு – அண்மைக்கால விருத்திகள், சவால்கள் மற்றும் மறுசீரமைப்புத் தெரிவுகள் 22 மற்றும்.27 (;செப். 23இ 2020). hவவிள:ஃஃறறற.iஅக.ழசபஃநnஃPரடிடiஉயவழைளெஃPழடiஉல-Pயிநசளஃஐளளரநளஃ2020ஃ09ஃ30ஃவுhந-ஐவெநசயெவழையெட-யுசஉhவைநஉவரசந-கழச-சுநளழடஎiபெ-ளுழஎநசநபைn-னுநடிவ-ஐnஎழடஎiபெ-Pசiஎயவந-ளுநஉவழச-49796 இல் கிடைக்கப்பெறும்.
மேற்சொல்லப்பட்ட அறிவிப்பின் உரிய பகுதி, 8 ஆம் பந்தியில் பின்வருமாறு தரப்பட்டுள்ளது. “புதிய பிணையங்களின் ஏதேனும் குறிப்பிட்ட தொடர்களின் 20மூ இனைக் கொண்டுள்ளோரினால் முன்மொழியப்படின், பிணைமுறி உரிமையாளர்களின் அதிகப் பெரும்பான்மை ஒன்றின் சம்மதத்துடன் நியூயோர்க் சட்டத்தினால் ஆளுகை செய்யப்படும் புதிய பிணையங்களின் ஆளுகைச் சட்டத்தினை ஆங்கில அல்லது டெலவெயார் சட்டத்திற்கு மாற்றுவதற்கான ஒரு பொறிமுறைக்கும் இணங்கப்பட்டது.”
முன்மொழியப்பட்டுள்ன சட்டத்தின் முழுமையான உரை வடிவம்: hவவிள:ஃஃறறற.லௌநயெவந.பழஎஃடநபளைடயவழைnஃடிடைடளஃ2023ஃளு5542ஃயஅநனெஅநவெஃயு இல் கிடைக்கப்பெறும்.
பார்க்க, லிபி ஜோர்ஜ், ரொட்றிகோ கம்போஸ், ‘நியூயோர்க்கின் இறைமைக் கடன் சட்டமூலத்திற்கு எதிராக வோல் ஸ்ட்ரீட் மோதுகின்றது’ (சுநரவநசளஇ 26 செப்டெம்பர் 2024)இ hவவிள:ஃஃறறற.சநரவநசள.உழஅஃஅயசமநவளஃறயடட-ளவசநநவ-ளவசமைநள-டியஉம-யபயiளெவ-நெற-லழசமள-ளழஎநசநபைn-னநடிவ-டிடைட-2024-09-26ஃ இல் கிடைக்கப்பெறும்.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Statements

CONCERNS WITH THE ‘CHOICE OF LAW’ PROVISION IN THE DEBT RESTRUCTURING AGREEMENT WITH PRIVATE BONDHOLDERS[1]

By YUKTHI Sri Lanka is currently negotiating the restructuring of its foreign...

Statements

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பிணைமுறி ஒப்பந்தத்தை நிராகரிக்குமாறு யுக்தி அழைப்பு விடுக்கின்றது

2024 செப்டெம்பர் 30மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் சனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னரும்இ தேர்தல்இடைவெளிக் காலப்பகுதி...

Statements

පසුගිය දිනවල සිදුකළ බැඳුම්කර ගනුදෙනුව ප්‍රතික්ෂේප කරන ලෙස ‘යුක්ති’ ඉල්ලා සිටියි

2024 සැප්තැම්බර් 30 ශ්‍රී ලංකාවේ බොහෝ කාලයක සිට බලාපොරොත්තුවෙන් සිටි ජනාධිපතිවරණයට දින...