Home Press Release தொழிலாளர் வர்க்கத்தின் மீதான ஏகாதிபத்திய யுத்தம் மற்றும் நவதாராளவாதத் தாக்குதல் – மே தினம், 2026
Press ReleaseStatements

தொழிலாளர் வர்க்கத்தின் மீதான ஏகாதிபத்திய யுத்தம் மற்றும் நவதாராளவாதத் தாக்குதல் – மே தினம், 2026

22

1970களின் பிற்பகுதியிலிருந்து இலங்கையின் நவதாராளவாத திறந்த பொருளாதாரத்தினுள் ஈர்க்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தின் – முறைசாரா மற்றும் நாட்கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் போன்றோரின் மீதான நவதாராளவாதக் கொள்கைகளின் கடும் தாக்குதல் குறித்து 2026 மே தினத்தன்று யுக்தி கூட்டிணைவு மீண்டும் வலியுறுத்துகின்றது. கடன் நெருக்கடி மற்றும் முதலாளித்துவ முறைமையினால் திணிக்கப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகள் என்பவற்றின் மத்தியில் இலங்கையின் தொழிலாளர் வர்க்கம் கடுமையாக சுரண்டப்பட்டு வருகின்றது.

2022 ஆண்டில் கடன் நெருக்கடி ஏற்பட்டதிலிருந்து, இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கட்டமைப்பு சீராக்கல் நிகழ்ச்சித்திட்டத்திற்கு (SAP) உட்பட்டு செயற்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் கட்டாய சீர்திருத்தங்களினுள் பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில் அதிகரிக்கப்பட்ட சேர்பெறுமதி வரி வீதங்கள். அரசிறையின் உச்ச வரம்புகளை இறுக்குதல், மற்றும் வெளிநாட்டு தனியார் இறைமைக்கடன் மறுசீரமைப்புடன் பி பிணைக்கப்பட்ட நலன்புரிச் செலவுகள் ஆகியவை உள்ளடங்குகின்றன. மக்களின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்களுக்கான பாதுகாப்புகளை நீக்குகின்ற, பொருளாதாரத்தின் நிலம், உழைப்பு. மூலதனம் மற்றும் வர்த்தகம் என்பவற்றின் – பாரிய ஒழுங்கமைப்பின்மையின் ஒரு பகுதியாகவும் இது உள்ளது.

2025 ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கை ஒரு தீவிர காலநிலை அனர்த்தமான டித்வா சூறாவளியை எதிர்கொண்டதுடன் தற்போது ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் யுத்தத்தினாலும் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. உல உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் ஏகாதிபத்திய சக்தியால் தூண்டப்படும்போது. இலங்கை போன்ற நாடுகளில் உள்ள தொழிலாளர் வர்க்கத்தினர், நெருக்கடியால் உருவாக்கப்படும் வழங்கற் சங்கிலிப் பற்றாக்குறைகள் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான உயர்ந்த விலைகள். அத்துடன் தொழில்வாய்ப்பு. வாழ்வாதாரம் மற்றும் வருமானங்களின் இழப்பு ஆகியவற்றிற்கான விலையை செலுத்துகின்றனர்.

கடந்த வருடத்தின் இறுதியில் டித்வா சூறாவளி தாக்கியபோது சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார இலக்குகளின் ஆரம்ப அனுமானங்கள் தவறானவை என நிரூபிக்கப்பட்டபோதும், இலங்கையில் 22 மில்லியன் மக்களை பாதித்த இத்தகைய ஒரு காலநிலை அனர்த்தமானது, வியக்கத்தக்க விதத்தில், கடன்களைத் திரும்பச் செலுத்துவதை இடைநிறுத்துதல் மற்றும் நிபந்தனைகளின் மீள்மறுசீரமைப்பு ஆகியவற்றை வலியுறுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைத் தூண்டவில்லை. கட்டமைப்பு சீராக்கல் நிகழ்ச்சித் திட்டத்தின் (SAP) நிபந்தனைகள் இந்த மனிதாபிமான அவசரநிலைக்குப் பயனுறுதியுடன் பதிற்செயற்பாடாற்றுவதற்கான அரசாங்கத்தின் இயல்திறனை மட்டுப்படுத்துகின்றன. காலநிலை இழப்பீடுகளுக்கு பதிலாக கடன் சுமையை அதிகரிக்கும் வகையில், சர்வதேச நாணய நிதியம் மேலும் ஒரு 206 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் கடனை நீட்டிப்புச் செய்தது.

சூழலியல் அனர்த்தத்திற்குப் பின்னரான அதிர்ச்சிக்கு மேலதிகமாக, அண்மையில் ஏற்பட்ட தீவிர நிலைமையொன்றான ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் யுத்தத்தின் உலகளாவிய விளைவுகளும் காணப்படுகின்றன. இறக்குமதியில் தங்கியுள்ள மற்றும் ஏற்றுமதி சார்ந்த இலங்கையைப் போன்ற பொருளாதாரங்களுக்கு இந்த மேற்பொருந்தும் யதார்த்தங்கள் பாதிப்புறுநிலையைத் தீவிரப்படுத்தியுள்ளன: மிகவும் உயர்ந்த எண்ணெய் விலைகள், துரிதப்படுத்தப்பட்ட பணவீக்கம், அத்துடன் ஏற்கனவே குறைக்கப்பட்ட வெளிநாட்டு செலாவணி இருப்புக்கள் மற்றும் விலைக் கட்டுப்பாடுகளுக்கான வெளியை மேலும் கட்டுப்படுத்துதல் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் பாய்ச்சலையும் உள்நாட்டைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள், சிறு விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் இந்த வெளிநாட்டுச் செலாவணிக் கட்டுப்பாடுகள் பாதிக்கின்றன. விவசாயிகளும் மீனவர்களும் இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்துக்கு மசகு எண்ணெயிலும் பயிர்ச்செய்கைக்கு இரசாயன உரங்கள் மீதும் தங்கியுள்ளனர். எண்ணெய் மற்றும் உரத்தின் வழங்கற் சங்கிலிகளில் ஏற்படும் முறிவு அவர்களின் உற்பத்திச் செலவை அதிகரித்து. அவர்களின் வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமன்றி உணவு உற்பத்தியையும் குறைக்கின்றது. இவ்வாறாக, கடன் மீளச் செலுத்தும் நிபந்தனைகளில் எவ்வித மாற்றமுமின்றி, கட்டமைப்பு சீராக்கல் நிகழ்ச்சித்திட்டத்தின் சுமையைப் போன்றே,இந்த நெருக்கடியினால் ஏற்படும் உண்மையான பாதிப்பையும் மீண்டும் ஒரு தடவை உழைக்கும் மக்களே எதிர்கொள்ள வேண்டியுள்ளது,

நெருக்கடிகளின்போது, சர்வதேச மற்றும் உள்ளூர் மேட்டுக்குடியினர் அதிகாரத்தையும் செல்வத்தையும் குவிக்கின்றனர்; தொழில் வழங்குநர்கள் மற்றும் முதலாளிகளுக்கு வெகுமதியாக சலுகைகள் வழங்கப்படுகின்றன. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன என்பதுடன் அவர்களின் வாழ்வாதாரங்களும் சீர்குலைக்கப்படுகின்றன. கவலைக்குரிய வகையில், இந்த அரசாங்கம் முறைமை மாற்றத்திற்குப்’ பதிலாக ‘முறைமையின் தொடர்ச்சியைத் தெரிவு செய்துள்ளது. இந்த சூழ்நிலையானது, பிணைமுறிகளைக் கொண்டுள்ளோரினதும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களிதும் (IFIs) பிடியை இறுக்கி, சமூக-பொருளாதார மற்றும் அரசியல் பணயக்கைதியாகவுள்ள இலங்கையின் நிலையை நீடித்து எமது சொந்த எதிர்காலத்தை கட்டியெழுப்பும் உரிமையை எமக்கு மறுக்கும் வகையில், 2027 மார்ச் மாதத்தில் 17 ஆவது நிகழ்ச்சித்திட்டம் முடிவடைந்த பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் புதிய நிகழ்ச்சித்திட்டத்திற்கான பாதையைத் தயார் செய்கின்றது.

உற்பத்தியிலும் மீள் உற்பத்தியிலும் ஈடுபடுகின்ற மற்றும் எமது மக்கள் மீதும் பூமியின் மீதும் அக்கறை கொண்டுள்ள பொருளாதாரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு யுக்தி கூட்டிணைவு அழைப்பு விடுக்கின்றது. கடுமையான சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்! சட்டவிரோத கடன்களை இரத்துச் செய்யுங்கள்!

2026, மே 01.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Press ReleaseStatements

Imperialist War and Neoliberal Onslaught on The Working Class – May Day 2026

On May Day 2026, the Yukthi Collective, reiterates the onslaught of neoliberal...