Home Press Release Statements யுக்தி கூட்டமைப்பு நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல்/கட்டுப்பாட்டு அதிகார சபை சட்டம்தொடர்பில்நுண் நிதி காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுடனும், மற்றும் சமூகமட்ட கடன் குழுக்களுடனும் ஆதரவாக நிற்கிறது
Statements

யுக்தி கூட்டமைப்பு நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல்/கட்டுப்பாட்டு அதிகார சபை சட்டம்தொடர்பில்நுண் நிதி காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுடனும், மற்றும் சமூகமட்ட கடன் குழுக்களுடனும் ஆதரவாக நிற்கிறது

219

Photo credits: Amali Wedagedara

யுக்தி கூட்டமைப்பு நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் / கட்டுப்பாட்டு அதிகார சபை சட்டம் தொடர்பில் நுண் நிதி காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுடனும், மற்றும் சமூகமட்ட கடன் குழுக்களுடனும் ஆதரவாக நிற்கிறது: நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டமூலம் மார்ச் 4ஆம் திகதி இலங்கையின் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

நிதி மற்றும் திட்டமிடல் துணை அமைச்சர் டாக்டர் அனில் ஜயந்த அவர்களின் கூற்றுப்படி, இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம் “போதிய அளவில் ஒழுங்குபடுத்தப்படாத நுண் நிதி மற்றும் பணம் கடன் வழங்கும் துறையை உரிமம் வழங்கி கண்காணிக்கும் ஒரு அதிகார சபையை நிறுவுவது; இதன் மூலம் கடன் பெறுபவர்களை சுரண்டலிலிருந்து பாதுகாப்பதுடன் நிதி நிலைத்தன்மையையும் உறுதி செய்வது” ஆகும்.

ஆனால், உயர் வட்டி விகிதங்களுடன் கூடிய சுரண்டல் தன்மை கொண்ட நுண் நிதி கடன்களால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையை குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்தல்” எனும் உறுதியளித்த அரசு (தேசிய மக்கள் சக்தி –NPP- தேர்தல் விஞ்ஞாபனம் , 2024: பக்கம் 44) தற்போது அவர்களின் தாங்க முடியாத சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் செயல்படுவது குறித்து, யுக்தி கூட்டமைப்பு தனது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தெரிவிக்கிறது.

அனுர குமார திசாநாயக்க அரசால் இயற்றப்பட்ட புதிய சட்டம், தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான சட்டங்களைகளை இயற்றிய ரணில் விக்கிரமசிங்க ஆட்சியின் தொடர்ச்சியான பாரம்பரியமாகும். இது நுண் நிதிக்கடன் வலையின் அடிப்படைக் காரணங்களைத் தவிர்த்து செல்கிறது; மேலும் பெண்கள் கடன் பெறுபவர்களுக்கு தேவையான கடன் நீதியைப் புறக்கணிக்கிறது.

இச்சட்டம் குடும்பக் கடன் மற்றும் பொதுக் கடன் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்புகளைப் புரிந்துகொள்ளத் தவறுகிறது. கட்டுபடியாகும் கடன்களுக்கு போதிய அணுகல் இல்லாததால் பொருளாதார செயல்பாடுகளில் வளர்ச்சி குறைவாக உள்ளது; இதன் விளைவாக தேசியக் கடனின் தீவிரச் சுழற்சி தொடர்ச்சியாக நிலைத்திருக்கிறது.

மேலும், புதிய அதிகார சபையில் பெண்களின் சமமான பிரதிநிதித்துவத்தை கட்டாயமாக்குவதிலும் இச்சட்டம் தோல்வியடைந்துள்ளது. கடன் பெறுகிற பெண்களின் பிரதிநிதிகளும், அவர்களாலே நடத்தப்படும் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த ஒழுங்குபடுத்தும் அமைப்பில் இடம்பெறவில்லை என்றால், அவர்களின் வாழ்வியல் அனுபவங்களை அதன் உறுப்பினர்கள் எவ்வாறு அறிந்து, வாழ்க்கையைத் தாங்கி நிறுத்துவதில் பெண்கள் வழங்கும் சம்பளமில்லா மற்றும் சம்பளத்துடன் கூடிய பங்களிப்புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தீர்மானங்களை எடுக்க முடியும்?

அமைப்பு மாற்றம்/ ஆட்சி மாற்றம்:

கடன்சுமையில் சிக்கியிருந்த இலட்சக்கணக்கான குடும்பங்கள் ‘அமைப்பு/ ஆட்சி மாற்றம்’ என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் NPP-க்கு வாக்களித்தனர். ஆனால், அவர்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் அறிக்கை வாக்குறுதியை மதித்து நிறைவேற்றுவதற்குப் பதிலாக, சட்டம் உருவாக்கும் செயல்முறையிலும் புதிய சட்டத்தின் கவனத்திலும் உள்ளடக்கத்திலும் அரசாங்கம் அவர்களது நம்பிக்கையை கலைத்துள்ளது.. NPP பாராளுமன்ற உறுப்பினர்கள்—அதில் சில பெண்கள் உறுப்பினர்களும் உட்பட—சட்டமாக நிறைவேற்றிய சட்ட மூலத்தை முறையாக வாசித்து புரிந்துகொள்ளாமல் இருந்ததோடு, தங்கள் தொகுதிகளில் உள்ள கிராமப்புற கடன் சமூக வழங்குநர்களின் கருத்துக்களையும் கேட்காமல் இருந்ததாகத் தோன்றுவது மிகுந்த அதிர்ச்சியூட்டுகிறது.

சுரண்டல் / சூறையாடும் தன்மை கொண்ட கடன் வழங்கல் (Predatory lending) முறைகள் முறையான மற்றும் முறையற்ற துறைகளில் இரண்டிலும் காணப்படுகின்றன. இந்த அமைப்புக்குள், இச்சட்டம் சுரண்டல் / சூறையாடும் தன்மை கொண்ட கடன் வழங்கல் மற்றும் கடன் மீளப்பெறும் (வசூலிக்கும்) நடைமுறைகளைப் புரிந்துகொள்வதிலும், அடையாளம் காண்பதிலும், அவற்றை தடை செய்வதிலும் தோல்வியடைந்துள்ளது. இது குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ‘உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களை’ (Licensed Finance Companies) முறையாக ஒழுங்குபடுத்துவதில் மத்திய வங்கியின் தோல்வியை மறைக்கும் ஒரு போர்வையாக செயல்படுகிறது.

மிகப் பெரிய குற்றச்செயலாளர்கள் பெரிய நிதி நிறுவனங்களே ஆகும்; அவற்றில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வைப்பு நிதி வைத்திருப்பவர்களாக உள்ளனர். அதனால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் சுரண்டல் நடைமுறைகளின் மூலம் கிடைக்கும் அதிகப்படியான லாபங்களில் பயன் பெறுகின்றனர்; அதன் ஈடாக இருப்பது பெரும்பாலும் கிராமப்புற ஏழைப் பெண்களின் நலன் ஆகும்.

கடன் வழங்கலில் துன்புறுத்துபவர்களையும் குழப்பக்காரர்களையும் ஒழுங்குபடுத்த வேண்டிய சட்டப் மீளுருவாக்கம் (law reform), அதை விடுத்து மிகுந்த ஒழுங்குபடுத்தலின் மூலம் சமூக அடிப்படையில் நடத்தப்படும் கடன் வழங்குநர்களை – மரண ஆதார சங்கம், விவசாய சங்கங்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பெண்களின் கூட்டமைப்புகள் – அழிக்கிறது. நலிவுற்ற தொழிலாளர் வர்க்க பெண்களுக்கு ஒரு உதவுகரமாகவும், தீங்கு விளைவிக்கும் கடன் வசூல் நடைமுறைகளிலிருந்து பாதுகாப்பாகவும் இருந்த இந்த அமைப்புகளை இந்த சட்டம் சிதைக்கிறது.

கட்டமைப்பு சீர்திருத்தத் திட்டங்கள் (Structural Adjustment Programmes):

இந்த புதிய சட்ட உருவாக்கத்துக்கான நோக்கம், சுரண்டல் கடனாளர்களின் கரிசனங்கள் மற்றும் தேவைகளை கருதாமல், சந்தை மற்றும் மூலதனத்துக்கு உகந்த கட்டமைப்பு சீர்திருத்தங்களை பின்பற்றுமாறு சர்வதேச நிதியியல் நிறுவனங்கள் (International Financial Institutions) வலியுறுத்தியமை ஆகும்.

2016 ஆம் அண்டு நுண் நிதி சட்டம் முதல், ரணில் விக்கிரமசிங்க ஆட்சியின் 2023 ஆம் ஆண்டு திருத்தம் வரை, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அதன் கடன் ஊடாக இந்நவீன சீர்திருத்தங்களை முன்னெடுத்தது.

2024-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த சில மாற்றங்களை உள்ளடக்கி, ஆனால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் கோரிய பெரும்பாலான மாற்றங்களை உள்ளடக்காமல் இல்லாமல், ஆசிய அபிவிருத்தி வங்கியின்கடன் நிபந்தனைகளுடன் இணைந்து NPP அரசு மூலம் 2026-ஆம் ஆண்டின் சட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வங்கி, நிதி, வர்த்தகம் மற்றும் முதலீட்டில் கட்டுப்பாட்டு மாற்றம் / கட்டுப்பாடு நீக்கம் மற்றும் ஏழை மக்களின் சேமிப்புத் மற்றும் கடன் நிறுவனங்களில் மிகுந்த ஒழுங்குப்படுத்தல் என்பவை பெரிய மூலதனங்களுக்கு அனுக்கூலமாக பாகுபாட்டை (bias to big capital) வெளிப்படுத்துகிறது; எதிர்கட்சியிலிருக்கும் போது இந்த விடயம் தொடர்பிலே தான் NPP முற்றிலும் விமர்சித்தது.

தேவையான சீர்திருத்தங்கள்:

நாம் விரும்பும் நிதி மற்றும் வங்கி சீர்திருத்தங்கள், அரசு வங்கிகளிலிருந்து மற்றும் பொது நிதியிலிருந்து பெறக்கூடிய கடனானது பெண் உற்பத்தியாளர்களுக்கு (விவசாயம் மற்றும் நுண்/சிறிய தொழில்களில் ஈடுபடுபவர்கள்) அணுகக்கூடியதும், அவர்களுக்கு கட்டுபடியாவதுமாக இருக்க வேண்டும்; தொழிலாளர்களுக்கு தகுந்த சம்பளம் மற்றும் சமூக பாதுகாப்பு வழங்கப்பட உகந்ததாக வேண்டும்; இதன் மூலம் குடும்பங்களுக்கு கண்ணியம் மிக்க வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் நல்ல வாழ்க்கை கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Statements

‘IMF, hands off our future’: YUKTHI collective 

Kristalina Georgieva of the International Monetary Fund (IMF) was in Sri Lanka...