ஊடக வெளியீடு
11.06.2024
உழைக்கும் மக்களின் ஜனநாயகம் மற்றும் நீதிக்கான போராட்டங்களுக்கு ஆதரவாக ஆய்வூ மற்றும் வாதிடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆர்வலர்கள் மற்றும் கல்வியலாளர்களின் தளமாக உள்ள யூக்தி கூட்டுஇ கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லுhரியில் (SLFI) ஐ_ன் மாதம் 10 ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில்இ கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தை தொடர்பான சர்வதேச அனுபவங்கள் சிவில் சமூக உறுப்பினர்கள்இ அரசியல்வாதிகள்இ மற்றும் ஊடகத்துறையினருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில் ஆர்ஜென்டினா குடியரசின் முன்னாள் பொருளாதார அமைச்சரும்; நியூ+யோர்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியருமான மார்டின் குஸ்மன்இ ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் ஆம்ஹெர்ஸ்ட்இ மாசசூசெட்ஸ் பல்கலைக்கழக பொருளியலாளரும் (IDEAs) வலையமைப்பின் இணை ஸ்தாபகருமான பேராசிரியர் ஜெயந்தி கோஷ் மற்றும் (IDEAs) வலையமைப்பின் நிர்வாக இயக்குனர் சார்ல்ஸ் அபுக்ரே ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இச்சர்வதேச பொருளாதார வல்லுநர்கள்இ “வேறு மாற்றீடு உண்டா? கடன் மறுசீரமைப்புஇ சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கையின் எதிர்காலம்” எனும் தலைப்பில் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக கடன் மறுசீரமைப்பு மற்றும்இ சர்வதேச நாணய நிதியத் திட்டங்களை மறுபரிசீலனை செய்வது தொடர்பான விடயங்களினைத் தமது சொந்த நாட்டு அனுபவங்களில் இருந்தும்இ தாம் கற்றுக்கொண்ட விடயங்களில் இருந்தும் மேற்கோள்காட்டி கலந்துரையாடியிருந்தனர். எடுத்துக்காட்டாக தனியார் கடன் வழங்குனர்களிடம் இருந்து பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களின்இ அதிகரித்த வெளியீடுகளால்இ ஆர்ஜென்டினா 2000 ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொள்ள நேரிட்டது. இதனால் ஆர்ஜென்டினாவில் ஏற்பட்ட கடனை மறுசீமைப்புச் செய்யூம் செயற்றிட்டத்தினை குஸ்மன் 2020 ஆம் ஆண்டு தலைமை ஏற்று வழிநடத்தினார். இது நாட்டின் இறையாண்மைப் பத்திரக் கடனினை ஜம்பத்தைந்து சதவீதத்தினால் குறைத்திருந்தது. இதன் மூலம் கிரேக்கத்திற்கு அடுத்தபடியாக அதிக கடனை வெற்றிகண்ட இரண்டாவது பெரிய நாடாகவூம் ஆர்ஜென்டினா அடையாளப்படுத்தப்பட்டது. அதேபோன்று சார்ல்ஸ் அபுக்ரேஇ கானாவின் வெளிநாட்டுக் கடன் நெருக்கடியினை இலங்கையூடன் ஒப்பிட்டுக் கூறியிருந்தார். குறிப்பாக இரு நாடுகளும் அற்றின் சர்வதேச இறையாண்மைப் பத்திரத்தினை மீளச் செலுத்தத் தவறியமையினைத் தொடர்ந்துஇ சர்வதேச நாணய நிதியத்துடன் அவற்றின் 17 ஆவது ஒப்பந்தத்தில் இணைந்திருப்பதனை அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறுகையில்இ இலங்கையினைப் போன்றேஇ கானாவூம் கடந்த நான்கு தசாப்தங்களாக சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களினையே நம்பியூள்ளது எனவூம்இ இறுதியில் இரு நாடுகளும் நெருக்கடியில் நிலைக்கு வந்து முடிவடைந்துள்ளன எனவூம் சுட்டிக்காட்டினார். அத்;துடன்இ சர்வதேச நாணய நிதியம் கடனைப் பெற்றுக்கொள்ளும் அரசுகளுக்கும்இ கடன் வழங்குனர்களுக்கும் இடையில் எந்தவித பாரபட்சமும் பார்பதில்லை எனவூம்இ சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்படும் ஆலோசனைகள் முற்றிலும் தொழில்நுட்பரீதியானவை இல்லை என்பதனையூம் விளக்கினார். அத்துடன்இ தனியார் மூலதனத்தினை ஒரு பகுதியளவாகக் கொண்டிருக்கும் மிகப்பெரும் பங்குதாரர்களினால் எவ்வாறு ஒரு நிறுவனம் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது என்பதனை புரிந்துகொள்ள அரசியல் காரணிகள் எந்தளவூ முக்கியம் என்பதனை வலியூறுத்தினார். அத்துடன்இ இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை கேள்விக்குட்படுத்துவதனைவிடஇ நாடுகள் தம் சொந்த தேசிய மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின அடிப்படையில் கடன் மறுசீரமைப்புத் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என வாதிட்டார். அத்துடன் கடன் நெருக்கடியில் உள்ள நாடுகள் தங்களுடைய சொந்த கடன் நிலைத்ததன்மைக்கான பகுப்பாய்வைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் குஸ்மான் விவரித்தார்இ அதன் மூலம் குறித்த நாடானதுஇ சர்வதேச நாணய நிதியத்தினால் தயாரிக்கப்பட்ட நிபந்தனைகளை மதிப்பீடு செய்யவூம்இ கேள்விக்குள்ளாக்கவூம் முடியூம் என்றார்.

ஆர்ஜென்டினாவிற்கான கடன் வழங்குனர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஊடான முன்னாள் பேச்சுவார்த்தையாளர் என்ற அடிப்படையில்இ சர்வதேச சட்டத்தில் கடன் மறுசீரமைப்புக்கான எந்த வழிமுறையூம் இல்லை என்று விளக்கினார். அத்துடன் கடனைப் பெற்றுக்கொண்ட அரசுகள்இ வெவ்வேறு கடன் வழங்குனர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதனைத் தவிர வேறு வழியில்லை எனவூம் இந்தச் செயன்முறையில் பேரம்பேசும் ஆற்றலின் முக்கிய பங்கினையூம் குஸ்மான் வலியூறுத்தினார். மேலும்இ வினைத்திறனான பேச்சுவார்த்தையினை மேற்கொள்வதற்குஇ நாடுகள் தமது நாணயஇ நிதி மற்றும் உற்பத்தித் திறன் தொடர்பான விடயங்களில் தௌpவான தேசிய கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியூறுத்தினார். நாடுகள் இக்கடனில் இருந்து விடுபடுவதற்குஇ சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைக் கடைபிடிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற கருத்தை அவர் சவாலுக்கு உட்படுத்தியதுடன்இ இக்கருத்து ஒரு கட்டுக்கதை எனவூம் வாதிட்டார். அத்துடன்இ பேச்சுவார்த்தைச் செயற்பாடுகளின்போதுஇ மாற்று நடைமுறைகளுக்கான சாத்தியம் உள்ளது என்பதனைக் குறிப்பிட்டதுடன்இ அதற்கான ஆதாரமாகஇ ஆர்ஜென்டினாவின் அரசாங்கத்தில் அவர் செயற்பட்ட காலத்திலிருந்த வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பினைக் குறித்துக்காட்டினார்.
கோஷ் தனது கருத்தினை முன்வைக்கும் போதுஇ சர்வதேச நாணய நிதியம் எவ்வாறு இலங்கையினைஇ இறையாண்மைப் பத்திரங்களை வழங்குவது உட்பட சர்வதேச மூலதனச் சந்தைகளில் இருந்து கடனினை வாங்குவதற்கு ஊக்குவித்தது என்பதற்கான வழிகளைஇ சர்வதேச ரீதியான பார்வையில் ஆய்வூ செய்தார். உண்மையில்இ இலங்கை கடைப்பிடிப்பதாக ஏற்றுக்கொண்டஇ மூலதனத்தினை அடிப்படையாகக்கொண்ட தாராளமயமாக்கல் பொருளாதார மூலோபாயக் கொள்கையானதுஇ சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். மேலும் இறையாண்மைப் பத்திரங்கள் மீதான அதிகூடிய கூப்பன் விகிதங்கள் ஏற்கனவே அதனை வைத்திருப்பவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கியூள்ளன என்று கோஷ் வலியூறுத்தினார். எனவே வழங்கப்பட்ட கடனின் தொகைக்கும் கடனுக்கான பிணையமாகப் பயன்படுத்தப்பட வேண்டிய சொத்தின் சந்தை மதிப்பிற்கும் இடையிலான வேறுபாடுகளை (Haircut) நிர்ணயிக்கும்போதுஇ அவர்களுக்கான இந்த உயர் வருவாயை மனதில் கொள்ள வேண்டும் எனக்குறிப்பிட்டார். அத்துடன்இ சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள பொருளாதார சீர்திருத்தங்களின் சுமையானதுஇ சாதாரண மக்களினையூம் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களினையூமே அதிகமாக தாக்கம் செலுத்துகின்றது. குறிப்பாக ஊதியம் பெறாத பராமரிப்பு வேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு பொதுச் சுகாதாரம்இ கல்வி மற்றும் சமூகநலத் திட்டங்ககளில் ஏற்படுத்தப்படும் குறைப்பு நடவடிக்கைகள் அதிர்ச்சியினை ஏற்படுத்துகின்றன என்பதை கோஷ் நினைவூட்டினார்.
குறித்த நெருக்கடி ஏற்படுவதற்கு மிகக்குறைந்த பொறுப்பைக் கொண்ட சமூகத்தில் உள்ள பிரிவினர் மீதுஇ அதனைச் சரிசெய்வதற்கான சுமையை சுமத்தாமல் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையூம் அவர் வலியூறுத்தினார். சர்வதேச நாணய நிதியத்தினையூம்இ தனியார் கடனாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் அதன் பங்கினையூம் பின்னோக்கித் தள்ளுவதற்கும் வறுமைக்குட்படுத்தப்பட்ட நாடுகளின் பொருளாதார மற்றும் கடன் நெருக்கடிகளுக்கான நீதியான வழியினை அடைந்து கொள்வதற்கும்இ சர்வதேச மட்டத்தில் இலங்கை ஏனைய கடனாளி நாடுகளுடன் ஒருங்கிணைய வேண்டும் என்று பிரபல பொருளியலாளர் வாதிட்டார்.
YUKTHI YouTube live link for the Public Seminar: https://youtube.com/live/3SF2L0nh_l4
For Download Press Releases:https://drive.google.com/drive/folders/1zM1T0-Ep0ayBZOQRu_t9Z-vBU8f9htou?usp=share_link
















Leave a comment