Media Release
13th September 2024
சமீப ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மற்றும் முன்மொழியப்பட்ட பல ஜனநாயக விரோத மற்றும் அடக்குமுறை சட்டங்களின் எதிர்மறையான தாக்கங்களை நீக்குவதற்கும், அதனை மாற்றியமைப்பதற்கும் உறுதியளிக்குமாறு ஜனாதிபதி வேட்பாளர்களை யுக்தி கேட்டுக்கொள்கிறது. அத்தோடு, சட்டமியற்றும் செயல்முறை மற்றும் முன்மொழியப்பட்ட சட்டங்களின் உள்ளடக்கம் குறித்து வலுவான மற்றும் தெளிவான நிகழ்ச்சி நிரலை உருவாக்குவதற்கும் இந்த கூட்டமைப்பு வேட்பாளர்களிற்கு அழுத்தம் கொடுக்கின்றது.
சமீப ஆண்டுகளில் பலவீனமான ஜனநாயக சட்ட உருவாக்கம் மற்றும் அடக்குமுறை சட்டங்களின் அதிகரிப்பு
ஜனநாயகத்திற்கு எதிரான சட்டத்தை எவ்வாறு ஆழமாக உருவாக்க முடியும் என்பதோடு அது எவ்வாறு இருந்திருக்கின்றது என கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் இடம்பெற்றுள்ள சட்ட சீர்திருத்த கட்டமைப்பு சுட்டிக் காட்டுகின்றது. பொருளாதார நெருக்கடி முதல் தேசிய பாதுகாப்பு வரையிலான பல்வேறு அச்சுறுத்தல்களின் கீழ், மக்களின் சுதந்திர உணர்வை ஒடுக்குவதற்கும், அடிப்படை உரிமைகள் மற்றும் மக்களின் சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை கட்டுப்படுத்துவதற்கும் பல சட்டங்கள் மற்றும் சட்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை மக்கள் சார்பாக அரசாங்கம் மேற்கொள்ளும் சர்வதேச உடன்படிக்கைகள், குறிப்பாக எமது வாழ்விலும் அபிவிருத்தியிலும் தாக்கம் செலுத்தும் போது அது தொடர்பில் பகிரங்கமாக மீளாய்வு செய்யப்படாமையால்; மக்களின் இறைமை அர்த்தமற்றதாகி விட்டது. கடந்த 30 மாதங்களில் சுமார் 102 சட்டங்கள் அல்லது திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஏறக்குறைய 35மூ மக்களின் பொருளாதாரம் மற்றும் பொருளாதார உரிமைகள் தொடர்பான சட்டங்களுடன், இந்த சட்டங்களின் குறுகிய மற்றும் நீண்ட கால விளைவுகளை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பு இல்லை. இரகசியச் சட்டங்கள், அவசர சட்டங்கள், ஆலோசனைச் சட்டங்கள் இன்மை, பின்னணித் தகவல் இன்மை அல்லது நியாயப்படுத்துதல் சட்டங்கள் போன்றன கடந்த காலத்தின் ஒரு விடயமாக மாற்றமடைய வேண்டும்.
ஜனநாயக சட்டத்தை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பு
இலங்கையில் ஜனநாயக சட்டத்தை உருவாக்கும் செயல்முறையை வலுப்படுத்த தெளிவான அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். சுதந்திரமான நீதித்துறை மற்றும் சட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்னரும் அதன் பின்னரும்; துடிப்பான நீதித்துறை மீளாய்வு என்பன இந்த உறுதிப்பாட்டிற்கு அடிப்படையானவை ஆகும். அதேபோன்று, இறுதியில் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை நீக்குவதற்கான ஆரம்ப புள்ளியாக, உரிய மற்றும் பொருத்தமான சட்டத்தை உருவாக்குவதற்கு அதிகாரப் பரவலாக்கம் அவசியமானதாகும். செயல்முறையின் அடிப்படையில், ஒரு வெளிப்படையான, ஆலோசனை மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறைக்கு அர்ப்பணிப்பு இருக்க வேண்டும், இதன் மூலம் இலங்கைப் பொதுமக்களுக்கு ஆய்வு செய்யவும், மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ளவும், விமர்சனம் செய்யவும், மதிப்பாய்வு செய்யவும், புதிய சட்ட முன்னேற்றங்களுக்கு பங்களிப்பு செய்யவும்; போதியளவு காலம் உள்ளது. குறிப்பாக பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் சட்டம் உருவாக்கும் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும். சட்டத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் மதிப்பு என்ன, யார் பயனடைவார்கள் போன்ற பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் புதிய சட்டங்களை பொது ஆய்வு செய்வதற்கும் அரசாங்கம் உதவ வேண்டும் மற்றும் சட்ட சீர்திருத்தத்தைத் தூண்டும் சிக்கல் பகுப்பாய்வு குறித்த பொது நலன்களை நியாயப்படுத்த வேண்டும்.
அடக்குமுறை மற்றும் நியாயமற்ற சட்டங்களை ரத்து செய்வதற்கும் மாற்றுவதற்கும் உறுதியளிக்கவும்
கடந்த இரண்டு ஆண்டுகளில் இயற்றப்பட்ட அனைத்து ஆக்கிரமிப்பு சட்டங்களையும் ரத்து செய்வதற்கும், மீளப் பெறுவதற்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியதும், உறுதியளிக்க வேண்டியதும் அவசியமாகும். உதாரணமாக, 2024ம் ஆண்டின் 9ம் இலக்க, இணையவழி (ழடெiநெ) பாதுகாப்புச் சட்டம், 2023ம் ஆண்டின் 02ம் இலக்க மறுவாழ்வுப் பணியகச் சட்டம், மற்றும் 2024ம் ஆண்டின் 45ம் இலக்க பொருளாதார மாற்றச் சட்டம், ஆகியவை முற்றிலும் தீங்கானவை, அவை ரத்து செய்யப்பட வேண்டும். 2023ம் ஆண்டின் 14ம் இலக்க உள்நாட்டு வருவாய் (திருத்தம்) சட்டம், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு என்ற போர்வையில் உழைக்கும் மக்களின் ஓய்வூதிய சேமிப்பை வலுக்கட்டாயமாகக் குறைக்கும் சட்டச் சீர்திருத்தங்களுக்குப் பதிலாக சேமிப்பை மீட்டெடுக்கும் மற்றும் உழைக்கும் மக்களின் நிதிப் பாதுகாப்பைப் பாதுகாக்க வேண்டும். 2024ம் ஆண்டின் 36ம் இலக்க மின்சாரச் சட்டம், 2023ம் ஆண்டின் 27ம் இலக்க மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் (திருத்தம்) (சட்டம்), மற்றும் 2023ம் ஆண்டின் 16ம் இலக்க மத்திய வங்கிச் சட்டம் போன்ற சட்டங்கள் அனைத்திலும் உழைக்கும் மக்களுக்கும் ஏழைகளிற்கும் சுமையை ஏற்படுத்தும் விதிகள் உள்ளன. மோசமான, மற்றும் வங்கியின் மீதான பாராளுமன்ற மீளாய்வுகளை மத்திய வங்கி அகற்றும் விடயத்தில், இந்த தீங்கு விளைவிக்கும் சீர்திருத்தங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆகஸ்ட் 2023-ன் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், பெப்ரவரி 2024-ன் ஒளிபரப்பு அதிகாரசபை வரைவுச் சட்டம், ஜனவரி 2024-ன் அரசு சாரா நிறுவனங்கள் வரைவுச்சட்டம், புதிய தொழிலாளர் சட்டங்களுக்கான முன்மொழிவுகள், 2024 ஜனவரி 1 இன் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையத்தின் சட்டவரைவு மீளப்; பெறப்பட வேண்டும். ஒட்டுமொத்தமாக, அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் முன்மொழியப்பட்ட பல்வேறு புதிய சட்டங்களின் கீழ் குறிப்பாக குற்றவியல் குற்றங்களின் அதிகரிப்பு கவலை அளிக்கிறது. இத்தகைய சட்டங்களின் மூலம் நிர்ப்பந்திக்கும் மற்றும் மிரட்டும் ஆட்சியை மாற்றியமைக்க வேண்டும்.
விஞ்ஞாபனங்கள் இப்பிரச்சினையை போதுமான அளவில் கையாளவில்லை
ஜனாதிபதி பதவிக்கான முக்கிய போட்டியாளர்களின் விஞ்ஞாபனங்கள் ஜனநாயக சட்டத்தை உருவாக்குவதற்கு குறைந்த அளவிலான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன. திரு. சஜித் பிரேமதாச, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு (Pவுயு) பதிலாக மனித உரிமைகளுக்கான பாதுகாப்புடன் கூடிய புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்க, தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர்களைப் பாதுகாக்க மின்சாரச் சட்டத்தில் திருத்தம், பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும், வீட்டு வேலைகள், பணியிட துன்புறுத்தல்கள் குறித்த சட்டத்தை இயற்றுவதற்கும், தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக தொழிலாளர் அலுவலகங்களை அதிகரிப்பதற்கும், ஜனாதிபதி செயலணியை நிறுவுதல், பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கான சட்டங்கள் மற்றும் இணைய சேவை வழங்குநர்களுக்கு பயனளிக்கும் வகையில் இணையவழி; பாதுகாப்பு சட்டத்தை திருத்துதல் போன்ற கணிசமான அளவு சட்ட திருத்தங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். திரு அநுர திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல், அதிகாரப் பரவலாக்கம், பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் ஒழித்தல், ஊடகச் சட்டங்களை மீளாய்வு செய்தல் மற்றும் இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்தல் உள்ளிட்ட ஊடக சுதந்திரத்தை மேம்படுத்துதல், குறிப்பிட்ட தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சலுகைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு, பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்த சட்டங்களை அறிமுகப்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குழந்தைகளை பாதிக்கும் மற்றும் பாலின அடையாளத்திற்கு எதிரான சீர்திருத்த சட்டங்கள், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சட்டங்களை திருத்துதல் மற்றும் நியாயமான வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை அறிமுகப்படுத்துதல் போன்றனவற்றை குறிப்பிடுகின்றது. மற்றும் திரு. ரணில் விக்கிரமசிங்க கடுமையான பொது விமர்சனத்திற்கு உள்ளான எந்தவொரு சட்டத்தையும் ரத்து செய்யவோ அல்லது மாற்றியமைக்கவோ எந்த உறுதிமொழியும் எடுக்கவில்லை. பிரதான வேட்பாளராக இல்லாவிட்டாலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு திரு.நுவான் போபகே உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்களை ரத்து செய்வதாகவும், அதேபோன்ற அடக்குமுறைச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதைத் தடுப்பதாகவும், இணையவழி; பாதுகாப்புச் சட்டம், புனர்வாழ்வுப் பணியகம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். மக்களின் இறையாண்மைக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் பணவியல் மற்றும் நிதிக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் உள்ள உரிமைகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை ரத்து செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார், மேலும் இலங்கை மத்திய வங்கிச் சட்டம், பொருளாதார மாற்றச் சட்டம் மற்றும் பொது நிதி முகாமைத்துவச் சட்டம் ஆகியவற்றை உதாரணங்களாகக் குறிப்பிட்டுள்ளார். சட்டங்களை நிறைவேற்றிய பின்னரான நீதித்துறை மறுஆய்வை அறிமுகப்படுத்த அவர் உறுதியளித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக, ஜனாதிபதித் தேர்தலில் முக்கியப் போட்டியாளர்களால் ஜனநாயகச் சட்டத்தை உருவாக்குதல் மற்றும் ரத்து செய்தல் மற்றும் சேதப்படுத்தும் போக்குகளை மாற்றியமைத்தல் ஆகியவற்றுக்கான உறுதிப்பாட்டில் தெளிவின்மை உள்ளது. இயற்றப்பட்ட எதிர்மறைச் சட்டங்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைத் தீவிரமாகப் பரிசீலித்து, இந்தச் சட்டங்களின் மீது தெளிவான கொள்கைப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு அறிவிக்குமாறு யுக்தி வேட்பாளர்களை வலியுறுத்துகின்றது.
நாம் தேடும் மாற்றம்
புதிய சட்டங்கள் இலங்கை மக்களின் இறையாண்மையை அங்கீகரிக்கும் வலுவான மற்றும் அர்த்தமுள்ள ஆலோசனை செயல்முறைகளின் உருவாக்கமாக இருக்க வேண்டும். பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வாழ்க்கை, சமூக மற்றும் பொருளாதார உரிமைகள், பரவலாக்கப்பட்ட முடிவெடுத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிர்வாகத்திற்கான உரிமைக்கான அரசியலமைப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
சட்டமன்றத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க, உழைக்கும் மக்களுக்கு மதிப்பான ஊதியம், தொழில்சார் சுகாதாரமும் பாதுகாப்பும் மற்றும் கண்ணியமான பணி நிலைமைகள், தனிநபர் மற்றும் பிற சட்டங்களில் உள்ள பாரபட்சமான விதிகளை நீக்குதல், விழிம்புநிலையில் இனம் காணப்பட்டவர்களிற்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் நிவர்த்தி செய்தல் மற்றும் சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பதை இலகுவாக்குதல்; போன்றன நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சட்டங்களும், நீதி, உண்மை மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரி இலங்கையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களும், வழக்குத் தொடுப்பவர்களும் இலகுவாக நீதியை அணுகுவதற்கான வசதிகளை ஏற்படுத்தல்.
சட்டம் இயற்றுவது அனைவரையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டியதுடன் நாட்டின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்.
யுக்தி என்பது இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நீதிக்காக உழைக்கும் மக்கள் இயக்கங்கள் மற்றும் மக்களின் போராட்டங்களை ஆதரிக்கும் ஒரு பன்மைத்துவ ஆய்வு அமர்வாகும். மக்களின் வாழ்க்கையைப் பற்றிய புரிதலை ஊக்குவிப்பதற்கும், விமர்சனப் பகுப்பாய்வு செய்வதற்கும், புதிய தாராளவாத கொள்கைக்கு மாற்று வழிகளை வழங்குவதற்கும் இந்த அமர்வு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. யுக்தி என்பது நடைமுறையில் வாழ்ந்தவர்களின் நிபுணத்துவம், பயிற்சியாளர்கள், தொழில் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் நிபுணத்துவத்தின் கூட்டமைப்பாகும். கூட்டமைப்பு மற்றும் அதன் முயற்சிகள் பற்றி மேலும் அறிய யுக்தி இணையதளத்தைப் பார்வையிடவும் – www.yukthisl.org
Leave a comment