2024 செப்டெம்பர் 30
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் சனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னரும்இ தேர்தல்
இடைவெளிக் காலப்பகுதி அறிவிக்கப்பட்ட பின்னருமான 2024 செப்டெம்பர் 19 ஆம் திகதிஇ கடன் மறுசீரமைப்பு
தொடர்பில் அரசாங்கம் தனது வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் கோட்பாட்டு ரீதியான ஒப்பந்தம் ஒன்றினை
எட்டியுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்தது. இந்தக் கடன் மறுசீரமைப்புச் செயன்முறைஇ சர்வதேச நாணய
நிதியத்தின் (ஐஆகு) குறைபாடுகளைக் கொண்டுள்ள கடன் நிலைத்தன்மைப் பகுப்பாய்வு (னுளுயு) ஒன்றினை
அடிப்படையாகக் கொண்டதாகும்.
கடன் நிலைத்தன்மைப் பகுப்பாய்வானது 2027 ஆம் ஆண்டளவில்இ வெளிநாட்டுக் கடன் மீளச்செலுத்தல்களுக்காக
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4.5மூ இனை இலக்காக நிர்ணயித்துள்ளது – இவற்றுள் முதல் தொகை மற்றும்
வட்டி மீள்கொடுப்பனவுகள் உள்ளடங்கும். இதுஇ பொதுச் செலவினங்களில் குறைப்பினை ஏற்படுத்தி
எதிர்வுகூறப்படும் வருமானங்களின் 30மூ இனை ஒத்ததாகும். மேலும்இ சர்வதேச நாணய நிதியத்தின்
நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதியில்இ இலங்கை மூலதனச் சந்தைக்குத் திரும்புவதற்கு வசதி செய்வதற்கும் கடன்
நிலைத்தன்மைப் பகுப்பாய்வு எதிர்பார்க்கின்றது. ஒவ்வொரு வருடமும்இ இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியின்
1.8மூ இனை சர்வதேச இறைமை முறிகளில் (ஐளுடீ) மிதக்க விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2027 ஆம்
ஆண்டில் இது 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். சர்வதேச இறைமை முறிகளில் (ஐளுடீ) மொத்த
உள்நாட்டு உற்பத்தியின் 1.8மூ இனை மிகவும் உயர்ந்த வட்டி வீதங்களில் மிதக்க விடுதல்இ மொத்த உள்நாட்டு
உற்பத்தியின் 4.5மூ வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்துவதற்காகும். இவ்வாறுஇ சர்வதேச நாணய நிதியத்தின்
கடன் நிலைத்தன்மைப் பகுப்பாய்வு இலங்கைக்குக் கடன் பொறியொன்றினை அமைக்கின்றது.
இந்தப் பிணைமுறி ஒப்பந்தம்இ 2025 – 2027 காலப்பகுதிக்கிடையேயான இலங்கையின் டொலர் – மொத்த உள்நாட்டு
உற்பத்தி வளர்ச்சி மட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ள உயர்ந்த வட்டி மற்றும் முதல் கொடுப்பனவுகளின் மீது
கருதப்படுகின்றவையான பேரின இணைப்புகளைக் கொண்ட முறிகளுக்கும் ஏற்பாடு செய்கின்றது. இந்தக்
காலப்பகுதியில் இரு தரப்பு மற்றும் வர்த்தகக் கடன் வழங்குநர்களுக்கான ஏதேனும் கடன் மீளச்செலுத்தல்களை
கடன் நிலைத்தன்மைப் பகுப்பாய்வு தவிர்ப்பதால்இ ரூபாவின் பெறுமதி அதிகரிப்பதற்கான சாத்தியம்
காணப்படுவதுடன் இது நாட்டின் டொலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அதிகரிப்பு ஒன்றிற்கும் வழிவகுக்கும்.
மேலும்இ வெளிநாட்டுக் கடன் செலுத்தல்களுக்கு அவசியமான வெளிநாட்டு வருமானங்களும் ரூபாவின் பெறுமதி
அதிகரிப்பின் காரணமாகக் குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
பிணைமுறிகளைக் கொண்டிருப்போரிடமிருந்தான கடன் நிவாரணம் குறைவானதுஇ அத்துடன் இத்தகைய உயர்ந்த
அளவுகளிலான கடன் மீளச
; செலுத்தல்களை ஆரம்பித்தல் வேண்டும் என்னும் நிலையில் இலங்கை அதன் கடன்
செலுத்தல்களிலிருந்து தவறுவதற்கான சாத்தியம் உள்ளது என்பதே இந்தப் போக்கின் அர்த்தமாகும். இது
இலங்கைக்கான ஒரு மோசமான ஒப்பந்தமாகும். சர்வதேச நாணய நிதியம் பிணைமுறிகளைக்
கொண்டிருப்போருக்கு உடந்தையாகக் காணப்பட்டுஇ இயன்றளவில் செல்வங்களை உறிஞ்சுவதற்கு அவர்களை
இயலச் செய்கின்றது.
இறைமைக் கடன் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ள அபிவிருத்திடைந்து வரும் நாடுகளின் எதிர்காலக் கடன்
மறுசீரமைப்புகளுக்கும் இந்த பிணைமுறி ஒப்பந்தம் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றது.
பிணைமுறிகளைக் கொண்டுள்ளோர் தற்போதுள்ள சட்டங்கள் தம்மால் மீட்டெடுக்கப்படக்கூடிய பெறுமதித்
தொகையினைப் பாதிப்படையச் செய்வதை விரும்பவில்லை. அதன் பிரகாரம்இ நியாயாதிக்கத்தை ஆங்கில அல்
லது
டெலவெயார
; சட்டத்திற்கு மாற்றுமாறு தம்மால் கோரக்கூடியதான பொறிமுறை ஒன்றினை அவர்கள
; அறிமுகம்
செய்கின்றனர். பிணைமுறிகளைக் கொண்டிருப்போர்இ அடிப்படையாகவுள்ள சட்டங்களை மாற்றுவதன்
மூலமாகவேனும் தங்களின் கடன்களின் மீட்சியை உறுதிப்படுத்துவதற்கு இது இயலுமான சுதந்திரத்தை ஏற்பாடு
செய்கின்றது. இதன் மூலம் இலங்கை மட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவதுடன்இ அதன் பிரசைகளுக்கான சிறந்த
நலன்களை கருத்திற் கொள்ளாதிருப்பதற்கும் அது கட்டாயப்படுத்தப்படுகின்றது.
யுக்திஇ இலங்கையின் உழைக்கும் மக்களின் இயக்கங்களுக்கும் சனநாயகம் மற்றும் நீதிக்கான போராட்டங்களுக்கும் ஆதரவளிக்கும்
ஒரு பன்முக மன்றமாகும்
Leave a comment